மகாவலி ஆற்றிலிருந்து இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

by Staff Writer 31-05-2022 | 6:42 AM
Colombo (News 1st) நாவலப்பிட்டி பகுதியில், மகாவலி ஆற்றிலிருந்து நேற்று(30) காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த இரு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவர் நாவலப்பிட்டி - கோனவளபதன பகுதியை சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.