VAT மற்றும் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு

VAT 12% ஆகவும் தொலைத்தொடர்பு வரி 15% ஆகவும் அதிகரிப்பு

by Bella Dalima 31-05-2022 | 4:50 PM
Colombo (News 1st) மூன்று கட்டங்களாக வரிகளை அதிகரிப்பதற்கான திட்டத்தை பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதற்கமைய, சில வரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதுடன், மேலும் சில வரிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இருந்தும் அடுத்த வருடம் ஏப்ரல் மாத்தில் இருந்தும் அதிகரிக்கப்படவுள்ளன. உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT)  8 வீதத்தில் இருந்து 12% வரையும் தொலைத்தொடர்புகள் வரி 11.25 வீதத்தில் இருந்து 15% வரையும் அதிகரிக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. தனிநபர் வருமான வரியும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. வருமான வரி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இறைவரி, பந்தயம் மற்றும் சூதாட்ட வரி என்பனவும் அதிகரிக்கப்படவுள்ளன. சட்ட மறுசீரமைப்பின் கீழ் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வௌியிட்ட கடிதம் ஒன்றின் மூலம் தொலைத்தொடர்புகள் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரித்திருத்தம் மூலம் இந்த வருடத்தில் 94 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் வருமான வரி திருத்தத்திற்கும் அரசாங்கம் தயாராகின்றது. மூன்று மில்லியன் ரூபாவாக காணப்பட்ட தனிநபர் வருமான வரி வரையறை தற்போது 1.8 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக மாதாந்த வருமானம் பெறுவோர் இதுரை இந்த வரியை செலுத்த வேண்டியிருந்ததுடன், தற்போது 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகம் வருமானம் பெறும் அனைவரும் வருமான வரியை செலுத்த வேண்டும். ஊழியர் வருமானத்தில் பிடித்து வைத்தல் வரி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தொழில்சார் நிபுணர்களுக்கு செலுத்தப்படுகின்ற ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட சேவை கொடுப்பனவிலும் பிடித்து வைத்தல் வரியினை விதிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. கம்பெனிகள் மீதான வருமான வரியை 24% லிருந்து 30% ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.   Revision of Personal Income Tax Rates effective from October 1, 2022 as detailed in the table below:

Taxable Income (Rs.)

Rate (%)

First 1.2 million

4

Next 1.2 million

8

Next 1.2 million

12

Next 1.2 million

16

Next 1.2 million

20

Next 1.2 million

24

Next 1.2 million

28

On the balance

32

 

ஏனைய செய்திகள்