பகிடிவதை தொடர்பில் 35 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

பகிடிவதை தொடர்பில் வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது

by Staff Writer 24-05-2022 | 6:34 PM
Colombo (News 1st) மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்தமை தொடர்பில் வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய வளாக மாணவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவர் தங்கியிருந்த விடுத்திக்கு சென்ற சில மாணவர்கள் அங்கிருந்த காவலாளியையும் அம்மாணவரையும் தாக்கியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தாக்குதலுக்கு இலக்கான விடுதியின் காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.