O/L அனுமதிப்பத்திரத்தை Download செய்யும் வசதி

O/L பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை பரீட்சைகள் திணைக்கள இணையத்திலிருந்து Download செய்யும் வசதி 

by Staff Writer 14-05-2022 | 2:26 PM
Colombo (News 1st) 2021 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம்(Download) செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளதுடன், அதற்கான அனுமதிப்பத்திரங்கள், தற்போது தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்தார். அனுமதிப்பத்திரங்கள் இதுவரை கிடைக்கவில்லையெனின், பரீட்சைகள் திணைக்களத்தின்  www.doenets.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, அதன் முதற்பக்கத்திலுள்ள எமது சேவைகள் எனும் நிரலின் கீழுள்ள க.பொ.த.சாதாரண தரம் 2021 அனுமதிப்பத்திர பதிவிறக்கம் பகுதியை தெரிவு செய்து, சரியான தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கத்தை குறிப்பிட்டு அனுமதிப்பத்திரத்தின் பிரதியை பதிவிறக்கம் செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். குறித்த அனுமதிப்பத்திரத்தில் பெயர், பாடம் மற்றும் மொழி மூலங்களில் திருத்தங்கள் ​மேற்கொள்ள வேண்டுமாயின், www.onlineexams.gov.lk எனும் பக்கத்திற்கு பிரவேசித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.