by Staff Writer 04-05-2022 | 9:45 AM
Colombo (News 1st) மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசித்துவரும் 7,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பருவ மழையை கருத்திற்கொண்டு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் ஆசிரி கருணாவர்தன தெரிவித்தார்.
இதனிடையே, மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பலத்த மழையுடனான வானிலை தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.