by Staff Writer 26-04-2022 | 8:35 AM
Colombo (News 1st) உலகின் செல்வந்தரான இலொன் மஸ்க்(Elon Musk), 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்யவுள்ளார்.
பங்கொன்று 54.20 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் 44 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்வதற்கு ட்விட்டர் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
273 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் இலத்திரனியல் வாகன தொழிலதிபராகவும் SpaceX எனும் விண்வெளி நிறுவன தலைவராகவும் அறியப்பட்டு வந்த Elon Musk, தமது நிறுவனங்களின் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் தற்போது இணைத்துக் கொண்டார்.