by Bella Dalima 14-04-2022 | 3:31 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவின் KwaZulu-Natal மாகாணத்தில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது.
பல மாதங்களில் பதிவாக வேண்டிய மழைவீழ்ச்சி சில பிரதேசங்களில் ஒரே நாளில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், குறித்த மாகாணத்தில் அனர்த்த நிலையை பிரகடனம் செய்யுமாறு உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, வௌ்ளத்தினால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக மக்கள் கட்டடங்களுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வௌ்ள அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர்.