இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன்

இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடனை பெற நடவடிக்கை

by Staff Writer 24-02-2022 | 9:50 AM
Colombo (News 1st) இந்தியாவுடனான ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நிதி அமைச்சு தயாராகியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஔடத நிறுவனங்களுக்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்திய அரச தலையீட்டுடன் அந்நாட்டு வங்கியுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இன்று(24) தெரிவித்துள்ளார். இதனிடையே, நாளைய தினம்(25) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் தாமும் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.