by Staff Writer 23-02-2022 | 1:10 PM
Colombo (News 1st) தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் (NIPM) விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நடைபெற்றது.
தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் தொழில்சார் அங்கத்துவத்தை துறையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் நிபுணர்கள் குழுவிற்கு ஜனாதிபதி வழங்கினார்.
தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனம் எதிர்காலத்தில் பல்கலைக்கழகம் போன்று செயற்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
ஏனைய தொழிற்துறைகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள இத்துறை, கடந்த ஆண்டு 4 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டியுள்ளது.
உயர்ஸ்தானிகர்கள், அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.