IND Vs PAK:அனுமதி சீட்டுகள் 5 நிமிடங்களில் விற்பனை

T20 உலகக் கிண்ணம்: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான அனுமதி சீட்டுகள் 5 நிமிடங்களில் விற்பனை

by Staff Writer 08-02-2022 | 3:47 PM
Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ​மோதும் போட்டிக்கான அனுமதி சீட்டுகள் அனைத்தும் 5 நிமிடங்களிலேயே இன்று விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7 ஆவது உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்16 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில் 45 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி மெல்பர்னில் நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் இன்று விற்பனை செய்யப்பட்டன. அனைத்து டிக்கெட்களும் 5 நிமிடங்களிலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 45 போட்டிகளுக்கான அனுமதி சீட்டு முன் விற்பனையில் மாத்திரம் 2 இலட்சம் அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளன.