by Staff Writer 30-12-2021 | 7:37 AM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு பால் மாவின் விலை இன்று (30) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒரு கிலோகிராம் பால் மா பக்கெட்டின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்படுள்ளது.
400 கிராம் எடை கொண்ட பால் மா விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 1,195 ரூபாவாக இருந்த 1 கிலோகிராம் பால் மா பக்கெட்டின் புதிய விலை 1,345 ரூபாவாக அமைந்துள்ளது.
480 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் புதிய விலை 540 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் விலை அதிகரித்துள்ளமையினால் , உள்நாட்டில் பல் மாவின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டாலும் அது பால் மா தட்டுப்பாட்டிற்கான தீர்வல்ல என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் மாவை கொண்டு வருவதற்கு தேவையான டொலர் கிடைக்கும் வரை சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீரவு கிடைக்காது எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.