by Staff Writer 28-12-2021 | 11:23 AM
Colombo (News 1st) சோமாலியாவின் பிரதமர் Mohamed Hussein Roble பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டு ஜனாதிபதி Mohamed Abdullahi Farmajo பிரதமரைப் பதவியிலிருந்து நீக்கி அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட முயற்சிப்பதாக பிரதமர் குற்றஞ்சாட்டியிருந்ததுடன், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படும் பாதுகாப்புப் படை பிரதமரை அவரது அலுவலகத்திற்குள் செல்லவிடாது தடுத்துள்ளதாக பிரதமரின் அதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனிடையே ஆட்சி அதிகாரத்திற்காக இந்த இரு தலைவர்களும் எடுத்துள்ள நடவடிக்கைகளால் நாட்டின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.