by Staff Writer 17-12-2021 | 3:14 PM
Colombo (News 1st) மாலைத்தீவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட சமையல் எரிவாயு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் நான்கு நாட்களாக எந்தவொரு எரிவாயு சிலிண்டரையும் சந்தைக்கு விநியோகிக்கவில்லை.
இதனால் பண்டிகைக்காலங்களில் உணவகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை கொழும்பை அண்மித்த EPIC BALTA கப்பலில் கொண்டுவரப்பட்ட 3200 மெட்ரிக் தொன் LP சமையல் எரிவாயுவை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிராகரித்தது.
Mercaptan உரிய தரத்தில் இல்லாமையே அதற்கான காரணமாகும்.
இந்நிலையில், மாலைத்தீவிலிருந்து கொழும்பிற்கு வருகை தந்த மற்றுமொரு கப்பலிலுள்ள 2000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவும் பரிசோதிக்கப்படுகின்றது.
கப்பலிலுள்ள சமையல் எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்காக மாதிரிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.