by Staff Writer 15-12-2021 | 8:29 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமுள்ள மதவாச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று தோல்வியடைந்தது.
மதவாச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த பின்னர் வரவு செலவுத் திட்டம் தொடர்பான தரவுகளை விநியோகிக்குமாறு எதிர்க்கட்சி சபையில் கோரியமைக்கு இடமளிக்கப்படாமையினால், சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பினால் தவிசாளர் சபையிலிருந்து வௌியேறினார். பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 6 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது.
இதேவேளை, கட்டான பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமும் தோல்வியடைந்தது. ஆதரவாக 17 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் வழங்கப்பட்டன.