by Bella Dalima 10-12-2021 | 6:22 PM
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (10) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் பிரகாரம், 93 மேலதிக வாக்குகளினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாக்களித்த நிலையில், ஏனைய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததுடன், இசாக் ரஹ்மான் , எம். முஷாரப் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.