by Staff Writer 24-11-2021 | 5:49 PM
Colombo (News 1st) வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களும் அவர்கள் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாமையினால் பாராளுமன்ற உறுப்பினர்களான H.M.M. ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய மூவரும் கட்சியில் வகித்து வரும் பதவிகளிலிருந்து உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கட்சியின் தீர்மானத்தை புறக்கணித்து நடந்தமைக்காக கட்சியின் தலைவரால் அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.