by Bella Dalima 12-11-2021 | 6:05 PM
Colombo (News 1st) கொழும்பு - பேஸ்லைன் வீதியில் கிருலப்பனை எட்மண்டன் வீதியில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக வெட்டப்பட்ட வடிகானில் மண் சரிந்து வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வடிகான் வெட்டிக்கொண்டிருந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
நாவலப்பிட்டியை சேர்ந்த 19 வயதான இளைஞரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.