by Staff Writer 19-10-2021 | 7:43 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் 13 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி சுகயீனமுற்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சட்ட வைத்திய அதிகாரியால் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் உறவினர் ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினாலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவரின் 25 வயதான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதியிடமிருந்து சிறுமியின் தகாத முறையில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன் குறித்த யுவதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவு முறை சகோதரியென பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.