by Staff Writer 18-09-2021 | 10:20 PM
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்காரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி தொழில்நுட்பப் பிரிவு மேற்கொள்கின்ற விசாரணையொன்று தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக தம்மை அழைத்துள்ளதாக அவர் தனது Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.