உக்காத Lunch Sheets தயாரிப்புகளுக்கு தடை 

ஆகஸ்ட்  முதல் உக்கக்கூடிய Lunch Sheets பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

by Staff Writer 14-07-2021 | 4:56 PM
Colombo (News 1st) ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் உக்கக்கூடிய Lunch Sheets மாத்திரம் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார். பொலித்தீன் உற்பத்திகளின் போது உக்காத Lunch Sheets தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்கு எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் காணப்படும் Lunch Sheets-ஐ மாத்திரம் விற்பனை செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 12 தொடக்கம் 15 மில்லியன் Lunch Sheets நாளாந்தம் இலங்கையில் பயன்படுத்தப்படுவதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.