by Bella Dalima 25-06-2021 | 1:13 PM
Colombo (News 1st) எஞ்சின் அறையில் தீ பரவிய MSC Messina கப்பலின் ஊழியர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென இந்திய கரையோர காவற்படை தெரிவித்துள்ளது.
தென் கடற்பரப்பில் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்த MSC Messina கப்பலில் தீ பரவியுள்ளது.
MSC Messina எனும் கப்பலின் எஞ்சின் அறையில் தீ பரவியுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா குறிப்பிட்டார்.
நாட்டின் மீட்கும் வலயத்திலிருந்து வெகு தொலைவில் குறித்த கப்பல் பயணிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து, குறிப்பிட்ட கடற்பிராந்தியத்தில் பயணிக்கும் கப்பல்களுக்கு அறிவித்துள்ளதாகவும் கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா மேலும் தெரிவித்தார்.