by Staff Writer 27-05-2021 | 3:13 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிராக எஞ்சியுள்ள ஒரு நாள் போட்டிக்கான பங்களாதேஷ் அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய, 21 வயதான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Naim Sheikh-இற்கு பங்களாதேஷ் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
19 வயதிற்குட்பட்ட பங்களாதேஷ் குழாத்தை Naim Sheikh பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (28) நடைபெறவுள்ளது.
நாளைய போட்டி எஞ்சியுள்ள நிலையில், தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.