by Bella Dalima 19-05-2021 | 5:25 PM
Colombo (News 1st) 2020/21 ஆம் கல்வி ஆண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து பூர்வாங்க செயற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையதளத்தினூடாக பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
பல்கலைக்கழக பாடநொறிகளை தெரிவு செய்வதற்கான வழிகாட்டல் கைநூலை அங்கீகரிக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கொள்வனவு செய்ய முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.