by Staff Writer 20-03-2021 | 3:09 PM
Colombo (News 1st) அம்பாறை - உஹன பிரதேசத்தில் பெரஷூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி, பொல்கொல்ல பகுதியை சேர்ந்த படைத்தளபதி மனோஜ் பத்மதிலக்க என்பவரே அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் கெடெட் அதிகாரியாக 2008 ஆம் ஆண்டு அவர் இலங்கை விமானப்படையில் இணைந்து கொண்டுள்ளார்.
மனோஜ் பத்மதிலக்க, கண்டி வித்தியார்த்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.
அனர்த்தத்தின் போது P.A.K.C. அபேகோன் என்பவர் காயமடைந்த நிலையில், அம்பாறை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரஷூட்டை தரையிறக்க 40-70 அடிக்கு இடைப்பட்ட உயரத்திற்கு வரும் போது காற்றின் திசை மாறுபட்டமையால் இரண்டு பெரஷூட்கள் ஒன்றோடொன்று மோதி அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.