கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 17-02-2021 | 9:35 AM
Colombo (News 1st) நேற்று (16) முதல் இன்று(17) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 756 கொரோனா நோயாளர்கள் பதவாகியுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த செயலணி சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 172 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 168 பேரும் கண்டி மாவட்டத்தில் 73 நபர்களும் கேகாலை மாவட்டத்தில் மூவரும் அம்பாறை மாவட்டத்தில் 22 பேரும் மன்னார் மாவட்டத்தில் 09 பேரும் வவுனியா மாவட்டத்தில் இருவரும் புத்தளம் மாவட்டத்தில் 25 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 12 பேரும் பதுளை மாவட்டத்தில் 30 நபர்களும் திருகோணமலை மாவட்டத்தில் இருவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூவரும் கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கோட்டை பகுதியில் 32 பேருக்கும் கொள்ளுப்பிட்டியில் நால்வருக்கும் பம்பலப்பிட்டியில் 06 பேருக்கும் நாரஹேன்பிட்ட பகுதியில் மூவருக்கும் வௌ்ளவத்தை பகுதியில் ஐவருக்கும் பொரளையில் 09 நபர்களுக்கும் மருதானையில் 06 பேருக்கும் தெமட்டகொடை பிரதேசத்தில் 07 பேருக்கும் கொட்டாஞ்சேனையில் 07 பேருக்கும் மட்டக்குளி பகுதியில் 11 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வத்தளை பிரதேசத்தில் 06 பேர், நீர்கொழும்பில் 38 பேர், பேலியகொடை பகுதியில் மூவர் உட்பட கம்பஹா மாவட்டத்தில் 168 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அம்பாறை - அக்கரைப்பற்று பகுதியில் ஐவர், அம்பாறை பகுதியில் 07 பேர், கல்முனையில் மூவர், உஹன பகுதியில் ஒருவர், சாய்ந்தமருது பகுதியில் இருவர் மற்றும் சம்மாந்துறை பகுதியில் நால்வர் உட்பட அம்பாறை மாவட்டத்தில் 22 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மன்னார் பிரதேசத்தில் 06 பேர் மற்றும் தலைமன்னார் பகுதியில் மூவர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். நுவரெலியா - பொகவந்தலாவை பகுதியில் நால்வரும் ஹங்குரன்கெத்த பகுதியில் ஒருவரும் கந்தப்பொல பகுதியில் மூவரும் நோர்வூட் பிரதேசத்தில் இருவரும் நுவரெலியா பிரதேசத்தில் இருவரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். பலாலி, அக்கராயன்குளம் மற்றும் பரந்தன் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதம் கிளிநொச்சி மாவட்டத்தில் மூவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்று (17) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 77,184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம், 70,429 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் நேற்றைய தினத்தில் மேலும் 06 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது.