by Bella Dalima 06-02-2021 | 5:11 PM
Colombo (News 1st) மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இணையத்தள சேவையை இராணுவ ஆட்சியாளர்கள் முடக்கியுள்ளனர்.
பேஸ்புக் முடக்கப்பட்ட அடுத்த நாளில் ட்விட்டரும் இன்ஸ்டாகிராமும் முடக்கப்பட்டன.
தற்போது இணையத்தள பாவனைக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அங்கு தற்போது மிகப்பெரிய எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மிகப்பெரிய நகராகிய யங்கூனில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இராணுவ சர்வாதிகாரம் தோல்வியடைந்து, ஜனநாயகம் வெற்றிபெற வேண்டுமென பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோசமெழுப்பியுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள நிர்வாகத் தலைவர் ஆங் சான் சூ கி-யையும் ஏனைய தலைவர்களையும் விடுவிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை மறிப்பதற்காக பொலிஸார் பிரதான வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.