Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (09) 697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான 357 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தவிர, கம்பஹா மாவட்டத்தில் 219 பேரும் கண்டி மாவட்டத்தில் 38 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 03 பேரும் மாத்தளை மாவட்டத்தில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில், கொழும்பு மாவட்டத்தின் பொரளை பகுதியில் 110 பேரும் கொள்ளுப்பிட்டியில் 25 பேரும் வௌ்ளவத்தையில் 11 பேரும் கிருலப்பனை பகுதியில் 08 பேரும் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் 04 பேரும் மட்டக்குளி பகுதியில் 128 பேரும் மருதானையில் 09 பேரும் தெமட்டகொடையில் 06 பேரும் அடங்குகின்றனர்.
இதனிடையே, கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தில் மூவரும் நீர்கொழும்பு பகுதியில் மூவரும் களனியில் 12 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
அத்தோடு, நேற்று மேலும் 2 மரணங்கள் பதிவாகியதை அடுத்து நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 30,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.