by Staff Writer 23-09-2020 | 4:17 PM
Colombo (News 1st) நாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் முதலாம் மற்றும் 6 ஆம் வகுப்பு தவிர்ந்த ஏனைய இடைநிலை வகுப்பு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மீளாய்வு செய்யப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.