சபாநாயகரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

சபாநாயகரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

by Staff Writer 18-09-2020 | 5:29 PM
Colombo (News 1st) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா B.டெப்லிட்ஸ் ஆகியோருக்கிடையில் சபாநாயகர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமெரிக்க முகவர் நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Reid Aishiman உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தார். இதனிடையே, நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் சீன தூதரகத்தின் முதலாவது செயலாளரான Ran Xiong ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நீதியமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் அபிவிருத்திக்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நாட்டின் நீதித்துறை கட்டமைப்பின் அபிவிருத்திக்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இந்த ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சீன பிரதிநிதிகள் தெரிவித்ததாக நீதியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய நீதிமன்றத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்