Colombo (News 1st) பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்துள்ள மற்றும் ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரிகள் மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களை பொதுச்சேவை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்
www.pubad.gov.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.