by Bella Dalima 11-07-2020 | 5:26 PM
Colombo (News 1st) நேபாளத்தின் மேற்கு பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் நிலச்சரிவுகள் மற்றும் வௌ்ள அனர்த்தத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழை வௌ்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வௌியேறியுள்ளனர்.
நேபாளத்தின் Myagdi மாவட்டத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் வரை காணாமற்போயுள்ளனர்.
சுமார் 50 பேர் மீட்பு படையினரால் பாதுக்காப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு நேபாளத்தில் கனமழை தொடரும் என நேபாள வானிலை மையம் தெரிவித்துள்ளது.