by Staff Writer 10-06-2020 | 9:07 PM
Colombo (News 1st) இலங்கையில் சிறுத்தைகளே இல்லை என கூறப்பட்ட நிலையில், அண்மைக்காலமாக மலையகத்தின் சில பகுதிகளில் சிறுத்தைகள் பலியான தகவல்கள் பதிவாகின.
இவ்வாறான பின்புலத்தில் பூனை இனத்தைச் சேர்ந்த மீன்பிடிப் பூனையின் சடலம் பண்டாரவளை - ஐஸ்லே பி மல்வத்த பகுதியில் நேற்று (09) மாலை மீட்கப்பட்டுள்ளது.
விவசாயக் காணியில் வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி இந்த மீன்பிடிப் பூனை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீன்பிடிப் பூனையின் உடல் பரிசோதனைகளுக்காக ராவணா எல்ல வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.