5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நிறைவு

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நிறைவு

by Staff Writer 03-05-2020 | 3:16 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் பின்னர் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது. 8,015 மில்லியனுக்கும் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி குறிப்பிட்டார். சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 25,25,528 குடும்பங்களுக்காக 12,627 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. நிவாரணம் வழங்கப்படவேண்டியவர்கள் என அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்காக 5 இலட்சம் ஒதுக்கப்பட்டிருந்ததாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாகவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.