by Staff Writer 13-02-2020 | 10:21 AM
Colombo (News 1st) அநுராதபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இசுறுசுமுனி பூங்காவில் காரொன்றை சோதனையிட்ட போதே போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் பிரகாரம், 5000 ரூபாவிற்கான 47 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனைத் தவிர, தங்க பிஸ்கட்கள் 280 கிராம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கூரிய ஆயுதமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹோமாகம மற்றும் பண்டாரவளை பகுதிகளை சேர்ந்த குறித்த இருவரும் இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.