by Staff Writer 28-01-2020 | 8:20 PM
Colombo (News 1st) சீனாவின் வுஹான் நகரில் வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றமை தொடர்பில் மன்னிப்புக் கோரும் வகையில், வுஹான் நகர மேயர் ஷூ ஷியான்வாங் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
10 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட வுஹான் பிராந்தியத்தில் இதற்கு முன்னர் இவ்வாறான நிலையைத் தான் கண்டதில்லை என ஷூ ஷியான்வாங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 106-ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 4500-ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தினும், வுஹான் நகரை விட்டு வெளியேற மாட்டோம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.