by Chandrasekaram Chandravadani 26-11-2019 | 12:15 PM
Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தொடர்ந்தும் பதவியில் நீடிக்க எவ்வித தடையும் இல்லை என அந்நாட்டு சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து பெஞ்சமின் நெதன்யாஹு விலகுவதற்கு சட்டபூர்வமான கட்டுப்பாடுகள் இல்லை என இஸ்ரேலிய சட்டமா அதிபர் எவிச்சை மன்டெல்பிட் (Avichai Mandelblit) கூறியுள்ளார்.
இஸ்ரேலிய சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் அமைச்சர்கள் தமது பதவிகளை வகிக்க முடியாது என்ற போதிலும், குற்றஞ்சாட்டப்பட்ட மற்றும் அனைத்து முறைப்பாடுகளும் நிறைவு செய்யப்படாதவிடத்து பிரதமர் ஒருவர் சட்டப்படி பதவி விலக வேண்டிய அவசியமில்லை.
எனினும், பெஞ்சமின் நெதன்யாஹுவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.