G 7 மாநாடு ஆரம்பம்

G 7 மாநாடு ஆரம்பம்

by Staff Writer 25-08-2019 | 3:38 PM
Colombo (News 1st) இந்தத் தடவை G 7 மாநாடு பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரில் ஆரம்பமானது. பொருளாதாரம், அரசியல், வௌியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. இந்தத் தடவை G 7 மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா, அவுஸ்திரேலியா, சிலி உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் பங்கேற்கின்றனர். அமெரிக்க - சீன வர்த்தகப் போர், ஈரானுக்கெதிரான பொருளாதாரத் தடை, அமேஸன் மழைக்காட்டில் பரவியுள்ள தீ, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறுவதில் தாமதம் உள்ளிட்ட விடயங்கள், தலைவர்களின் உரையில் இடம்பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனிடையே, சுற்றுச்சூழல் பாதிப்பு, உலகமயமாக்கல், பலஸ்தீன உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து பியாரிட்ஸ் நகரின் அருகே பிரான்ஸ் - ஸ்பெயின் எல்லையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதையடுத்து கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.