பொலிஸ் அதிகாரியை தாக்கியமை தொடர்பில் சமிந்த விஜேசிறி மன்றில் ஆஜர்
by Staff Writer 13-02-2019 | 1:19 PM
Colombo (News 1st) பொலிஸ் அதிகாரியொருவரை தாக்கியமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் சிலருடன், பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சாரதிக்கு இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதலொன்று ஏற்பட்டிருந்தது.
இதன்போது, காயமடைந்த போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள், பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்து சமிந்த விஜேசிறியின் சாரதி தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினத்தில் அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.