by Staff Writer 29-01-2019 | 7:16 PM
Colombo (News 1st) பண்டாரவளை - எல்ல பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 10 பேர் அடங்கலாக 20 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான 20 பேரும் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெமோதர வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
எல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.