by Staff Writer 11-12-2018 | 3:58 PM
Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர சாதாரணதர கணிதப் பரீட்சையின் போது பரீட்சார்த்திக்கு பதிலாக பரீட்சை எழுதிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை, திஹகொட - புஹூல்வெல்ல பகுதியிலுள்ள பாடசாலையில் 24 வயதான பரீட்சார்த்திக்கு பதிலாக பரீட்சையில் தோற்றிய 25 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதான பரீட்சார்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை- கரதொட்ட பகுதியைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தணமல்வில - போதாகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலும் கணிதப் பரீட்சையில் பரீட்சார்த்திக்கு பதிலாக தோற்றியவரும் பரீட்சார்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
40 மற்றும் 45 வயதான இருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கல்முனை - சாய்ந்தமருது பகுதியிலும் போலி பரீட்சார்த்தியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.