by Staff Writer 30-09-2018 | 10:44 PM
இலங்கையில் முதற்தடவையாக இடம்பெற்ற '' SRI LANKA'S GOT TALENT - Season 01 '' ரியலிட்டி நிகழ்ச்சியின் கிரீடம் இலங்கை விமானப்படையின் தற்காப்புக் கலை அணி வசமானது...
ரத்மலான ஸ்டைன் ஸ்டூடியோ கலையகத்தில் இறுதிப் போட்டி இன்று இரவு 07.30 மணியளவில் ஆரம்பமானது
இறுதிப் போட்டியில் பலரதும் எதிர்பார்ப்பாக திகழ்ந்த கணிதத்துறையில் விற்பன்னரான சிறுமி நிம்னா இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டார்.
உலகின் 80 நாடுகளில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்று வருவதுடன் அந்த அனுபவத்தை இலங்கை நேயர்களுக்கு வழங்கிய இலங்கையின் முதலாவது நிகழ்ச்சியாக SRI LANKA'S GOT TALENT - Season 01 பதிவாகின்றது.
பாடல்,நடனம்,மெஜிக்,சர்க்கஸ்,ஜிம்னாஸ்டிக்,செல்லப்பிராணிகளின் விசேட சாகசங்கள்,நகைச்சுவை,உள்ளிட்ட பல்சுவ அம்சங்களை கொண்ட போட்டியாளர்கள் இதில் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் பல சுற்றுக்களில் இருந்து தெரிவான ஆறு பேர் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.
SRI LANKA'S GOT TALENT - Season 01 ரியலிட்டி நிகழ்ச்சியின் இலங்கை வடிவமான சிரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்சிசகளின் நடுவர்களாக பிரபல நடிகர் ஜெக்ஸன் அந்தெனி,பிரபல சங்கீத இசைக்ககலைஞர் சௌந்தரி ரொட்ரிகோ மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம் டில்ஷான் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.
இறுதிப் போட்டியில் நேயர்களின் SMS வாக்குகளால் 50 வீதமும் நடுவர்களின் முடிவில் 50வீதமும் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க வழிகோலின.
முதலவாது வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ஒரு கோடி ரூபா பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
SRI LANKA'S GOT TALENT - Season 01 நேரடி ஔிபரப்பினை இலட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்...
பல மாதங்களாக வார இறுதி நாட்களில் ஔிபரப்பகிய SRI LANKA'S GOT TALENT - Season 01 நிகழ்ச்சி இன்று இறுதிப் போட்டியுடன் முதற்கட்டம் நிறைவுக்கு வந்தது.