உ.கிழங்கு, பெ.வெங்காயம் கொள்வனவு செய்யத் தீர்மானம்

உற்பத்தியாளர்களிடமிருந்து உ.கிழங்கு, பெ. வெங்காயம் கொள்வனவு செய்யத் தீர்மானம்

by Staff Writer 19-09-2018 | 11:15 AM
உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 90 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கும் இன்று (19) முதல் கொள்வனவு செய்ய வாழ்க்கைச்செலவு குழு தீர்மானித்துள்ளது. இவை சதொசவின் ஊடாக கொள்வனவு செய்யப்படவுள்ளன. தேசிய ரீதியில் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாழ்க்கைச் செலவு குழுவில் அங்கம் வகிக்கும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய நடவடிக்கைகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உணவு சந்தைப்படுத்தல் மற்றும் வணிக பிரிவின் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.