மோட்டார் சைக்கிள் திருடிய மூவர் கைது..

மோட்டார் சைக்கிள் திருடிய மூவர் கைது..

by Staff Writer 19-07-2025 | 4:37 PM

மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கிரிஉல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நீர்கொழும்பு மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

திருடப்பட்ட 04 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொட்டதெனியாவ பகுதியைச் சேர்ந்த 20 வயதான சந்தேகநபர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.