தேஷபந்து விசாரணை அறிக்கை அடுத்த வாரம்

தேஷபந்து விசாரணை அறிக்கை அடுத்த வாரம்

by Staff Writer 19-07-2025 | 4:30 PM

 சபாநாயகரிடம்

பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேஷபந்து தென்னகோனினால் முன்னெடுக்கப்பட்டதாக சட்டவிரோத செயற்பாடுகள் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு அண்மையில் சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்தது.

உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன குறித்த குழுவின் தலைவராக செயற்படுவதுடன் இலஞ்ச ஊழல் விசாரணைக் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் நீல் இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.