.webp)
திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முப்படையினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம்(17) நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 14,000 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது 1,461 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 810 பேரும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 621 பேரும் உள்ளடங்குகின்றனர்.
பதில் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைவாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில்ஒரு வாரத்தில் 3283 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.