.webp)
நாட்டின் சர்வதேச விமான நிலையங்களை அண்மித்து பட்டம் விடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
நாளாந்தம் சர்வதேச விமான போக்குவரத்து முன்னெடுக்கப்படும் விமான நிலையங்களை அண்மித்த 05 கிலோ மீற்றருக்குட்பட்ட பகுதிகளில் 300 அடிக்கு மேலாக பட்டம் விடுவது கடுமையான ஆபத்தை ஏற்படுத்தலாம் என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை கவனத்திற் கொள்ளாமல் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், பலாலி சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஸ கூறினார்.