.webp)
-559980.jpg)
Colombo (News 1st) 160 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு திம்பிரிகஸ்யாய பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் விசேட நிகழ்வு நடத்தப்பட்டது.
1866 ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதி இலங்கை பொலிஸ் சேவை ஆரம்பமானதுடன் அன்று முதல் 160 வருடங்களாக நாட்டில் சட்டம் மற்றும் அமைதியை பாதுகாப்பதற்காக இலங்கை பொலிஸார் தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றனர். பொதுமக்களின் வாழ்க்கையையும் சொத்துக்களையும் பாதுகாத்தல், குற்றங்களை தடுத்தல், குற்றங்களை விசாரித்தல் மற்றும் நாட்டில் சட்டத்தையும் அமைதியையும் முன்னெடுத்துச் செல்லல் என்பன இலங்கை பொலிஸூக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை பொறுப்புகளாகும்.
160 வருட கால வரலாற்றில் கடமை நேரத்தின் போது உயிர்நீத்த மற்றும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பொதுமக்களுக்காக சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களும் நினைவுகூரப்பட்டனர்.
