வெளிநாட்டு இலங்கையர்களுக்கு வாக்குரிமை

வெளிநாட்டு இலங்கையர்களுக்கு வாக்குரிமை : விசேட கலந்துரையாடல்

by Staff Writer 03-09-2026 | 9:49 AM

Colombo (News 1st) வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
05 நாடுகளின் தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகளுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. வௌிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாக செயற்படும் பல அரச நிறுவனங்களும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.ஏ.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்தார். குறித்த நாடுகளில் உள்ள தேர்தல் முறைமைகள் மற்றும் எதிர்காலத் தேர்தல்களில் அத்தகைய முறைமைகளை இலங்கையில் பயன்படுத்துதல் என்பன தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.