.webp)
-559958.jpg)
Colombo (News 1st) தெஹிவளை, மொரட்டுவை உள்ளிட்ட பகுதிகளில் இன்று (03) இரவு 08 மணி முதல் நாளை (04) இரவு 08 மணி வரை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. நுகேகொட, கொஹுவல, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, இராவதாவத்தை, சொய்சாபுர, அங்குலானை, இதிபெத்த, கட்டுக்குருந்த, கட்டுபெத்த, கல்தெமுல்ல, கொரலவெல்ல மற்றும் எகொடஉயன உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
