.webp)
-559964.jpg)
Colombo (News 1st) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்தும் அவர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டுமா, இல்லையா? என்பது தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி Oxford Perera முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 3-வது தடவையாகவும் சுரேஷ் சலேவை 90 நாட்கள் தடுத்து வைப்பதற்கு உத்தரவு பெறப்பட்டிருந்தது. அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.உயிர்த்தஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
